பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
02:07
திருப்போரூர்; திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி வழிபாட்டுடன் கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமை கந்தப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்தப்பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூர் வருகின்றனர். காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 8:00 மணியளவில், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி கூட்டு வழிபாடு செய்தனர்.
அந்த வகையில், இன்று புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, கந்தசுவாமி கோவிலுக்கு வந்தார். மூலவர், உற்சவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னிதிகளையும் வழிபட்டார். அடுத்த வாரம் அவருக்கு பிறந்த நாள் என்பதாலும், செவ்வாய்க்கிழமை கந்தனுக்கு உகந்த நாள் என்பதாலும், இன்று வழிபட்டார்.