பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
12:07
சென்னை; ஆடி மாதம் முதல் தேதியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம், ரங்கநாத சுவாமி கோவில் சார்பில், திருப்பதி திருமலை வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. முகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது, அவர்களிடம் நம்பெருமான் விக்ரகங்கள் சிக்காமல் இருப்பதற்காக, திருப்பதி மலையில் வைத்து, 50 ஆண்டுகள் விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டன. அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம், ரங்கநாத சுவாமி கோவில் சார்பில், ஆடி மாதம் முதல் தேதி, ஆந்திர மாநிலம், திருமலை, வெங்கடாசலபதி பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று, திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வெங்கடாசலபதி பெருமாளுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.