Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளர்பிறை ஏகாதசி; வரதராஜ பெருமாள் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் விரைவில் கல்வி சேவை திட்டம் துவக்கப்படும்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் விரைவில் கல்வி சேவை திட்டம் துவக்கப்படும்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
06:07

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் விரைவில் கல்வி சேவை திட்டம் துவக்கப்படும் என்று காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.


ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாத சுவாமி கோயிலுக்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து தரிசிக்கின்றனர். இங்குள்ள கடலே அக்னி தீர்த்தமாக உள்ளதால் பக்தர்கள் நீராடி தரிசிக்கின்றனர். ஆதிசங்கரர் தரிசனம் செய்த 12 ஜோதிர் லிங்க தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஞ்சி மகா பெரியவர் பலமுறை இங்கு வந்து அபிஷேகம் செய்து தரிசனம் செய்துள்ளார். 2023ல் காசி யாத்திரைக்காக தனுஷ்கோடியில் மணல் எடுத்து சிவலிங்கம் வடிவமைத்து காசி கங்கை நதியில் கரைத்து, அங்கிருந்து கலசத்தில் கங்கை நீர் எடுத்து வந்து இன்று ராமநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜை செய்தேன். தேச ஒற்றுமைக்கு மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ராமேஸ்வரத்தில் மக்களுக்கு கல்வி சேவை மற்றும் பல நல்ல திட்டங்கள் விரைவில் துவக்கப்படும் என்றார். முன்னதாக காலை 10:20 மணிக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயிலுக்கு வந்தார். கோயில் தக்கார் பழனிகுமார், இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோயில் குருக்கள் பூரணகும்ப மரியாதை அளித்தனர். பின் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்று கங்கை நீரில் அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிக்குள் சென்று தரிசனம் செய்தார்.


அம்மனுக்கு தங்க செயின்; ராமநாத சுவாமிக்கு வில்வ இலை பொறித்த தங்க நெற்றிப்பட்டையும், பர்வதவர்த்தினி அம்மனுக்கு 3 பவுனில் மாங்காய் வடிவம் பொறித்த தங்க சங்கலியையும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார். கடந்தாண்டு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருவறைக்குள் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தவிர்க்க நேற்று பணியில் உள்ள கோயில் குருக்கள் தவிர வேறு யாரையும் சன்னதியில் நிற்க அனுமதிக்கவில்லை.


ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருவறைக்குள் அபிஷேகம் பூஜை செய்த போது திரை மூடப்பட்டது. அப்போது காஞ்சி மடம் பக்தர்கள் திரையை விலக்கும் படியும், சன்னதி முன் நிற்க அனுமதிக்கவும் வலியுறுத்தினர். இவர்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் இருகரம் கூப்பி அமைதி காக்கும்படி சமரசம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar