ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 12:07
காரைக்குடி; காரைக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடிமாதத்தில் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது ஆடி மாதம் தொடங்கியதையடுத்து முதல் ஆடிவெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், கொப்புடையநாயகி அம்மன், கொல்லங்காளியம்மன், கணேசபுரம் மாரியம்மன் கண்டனூர், கோட்டையூர், சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடந்தது.