ஆடி வெள்ளி; வெட்டிவேர் அலங்காரத்தில் திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 05:07
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு வெட்டிவேர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், தொடர்ந்து வெட்டிவேர் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சகசர நாமம், 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூக நிர்வாகிகள் செய்திருந்தனர்.