ஆடி முதல் சோமவாரம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2024 10:07
கோவை; மதுக்கரை பகுதியில் மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் முதல் சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் குங்குமம் - விபூதி அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.