Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் ... பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்   பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்த வாரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்த வாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
03:07

மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் இன்று பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த நாட்களின் போது சுவாமி பரங்கி நாற்காலி,பல்லக்கு,குதிரை,சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்தாண்டுக்கான விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .இதனைத் தொடர்ந்து விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் கடந்த 18ம் தேதியும், 21ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியான தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக இன்று காலை கோவிலிருந்து வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.அங்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன. மாலை சக்கரத்தாழ்வாருக்கு மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வீர அழகர் அண்ணாமலை நகர்,அன்பு நகர், சிவகங்கை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா சென்ற பின்பு கோயிலுக்கு வந்தடைந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar