Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசாள வந்த அம்மனுக்கு மூன்றாம் நாள் ... ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் ஓரிக்கை மஹா பெரியவர் மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காவல் தெய்வத்திற்கு அரசின் இலவச சேலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காவல் தெய்வத்திற்கு அரசின் இலவச சேலை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2024
05:07

திருவண்ணாமலை; ‘‘திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பெண் காவல் தெய்வத்திற்கு சாத்தப்பட்ட, தமிழக அரசின் இலவச சேலை, திருவூடல் திருவிழாவின்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது,’’ என, கோவில் இணை ஆணையர் ஜோதி கூறினார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள, 63க்கும் மேற்பட்ட சன்னதிகளில், சுவாமி, அம்மன் சிலைகள், 63 நாயன்மார்கள், நந்தியம்பெருமான், துவாரபாலகர்கள் சிலை என, 500க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. முக்கிய சன்னதிகளில் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் செய்தும், துவார பாலகர்கள் உள்ளிட்ட சில சிலைகளுக்கு விசேஷ நாட்களிலும் அபிஷேகம் செய்து புதிய, வேட்டி, சேலை அணிவிக்கப்படும். கடந்த பவுர்ணமியில் அம்மன் சன்னதி நுழைவாயிலிலுள்ள பெண் காவல் தெய்வத்திற்கு, அரசின் இலவச சேலை கட்டப்பட்டிருந்தது. இதை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் மொபைல்போனில் படம் எடுத்து வைரலாக்கினார். கோவில் நிர்வாகம் உடனடியாக அதை மாற்றினர். 


இது குறித்து கோவில் இணை ஆணையர் ஜோதி கூறுகையில், ‘‘கடந்த ஜன., ல் நடந்த திருவூடல் திருவிழாவில், சுவாமி வீதிஉலாவின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக, சேலை, வேட்டி வழங்கினர். அப்போது யாரோ அரசின் இலவச புடவையை வழங்கியுள்ளனர். அதை கவனியாமல் பெண் காவல் தெய்வத்திற்கு அணிவிக்கப்பட்டது. ஊழியர்கள் கவனத்திற்கு வந்த பின் உடனடியாக மாற்றப்பட்டது,’’ என்றார்.


இது குறித்து, கோவில் ஊழியர்கள் கூறுகையில், ‘ஆகம விதிப்படி, புதிய துணிகளை மட்டுமே சுவாமிக்கு அணிவிப்பது வழக்கம். விழா காலங்களில் சுவாமி வீதி உலாவின் போது நுாற்றுக்கணக்கான வேட்டி, சேலைகள் சுவாமிக்கு காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவர். அப்படி யாரோ ஒரு பக்தர், அரசு வழங்கிய இலவச புதிய சே‍லையை வழங்கி உள்ளனர். அதுதான் கட்டப்பட்டது. பழையது கிடையாது’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar