ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஜூலை 22 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும் இரவில் மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, பின்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்று மூன்றாம் நாளை முன்னிட்டு, அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்பு, பெண்கள் கோயிலின் முன்பு கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.