பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2012 11:11
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், கந்தசஷ்டி சூரம்சம்ஹார திருக்கல்யாண திருவிழா ஏழு நாட்கள் நடக்கிறது. பக்தர்கள் ஏழு நாட்களில் விரதம் இருப்பர். விரதத்தின் அடையாளமாக கையில் காப்பு கட்டிக்கொண்டனர். கோயிலில் தினமும் மூலவர் சுப்பிரமணியருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 18 மாலை சூரசம்ஹாரமும், மறுநாள் நவம்பர் 19ல் திருக்கல்யாணமும் நடக்கிறது. திருக்கல்யாணத்திற்கு பிறகு வடை, பாயாசத்துடன் உணவு பரிமாறப்படும். ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுதா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.