பதிவு செய்த நாள்
16
நவ
2012
11:11
கோவை: கோவை, உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளில், வாடகைக்கு இருந்தவர்கள் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை, 16 லட்சம் ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, இக் கோவில். இங்கு தற்போது, ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. அது தவிர, சொந்தமாக இருந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இந்த வாடகை பாக்கி குறித்த பட்டியல், கோவில் வளாகத்தில், அரசு உத்தரவுப்படி வைக்கப்பட்டுள்ளது.தெற்கு உக்கடம், கிருஷ்ணனுக்காக அவரது மகன் கணேசன், இரண்டு லட்சத்து 51 ஆயிரத்து 982 ரூபாய், கடை வாடகையாக தர வேண்டிய பணம், வசூலாகாமல் உள்ளது. கோட்டை பெருமாள் கோவில் வீதி பத்மநாபன் (ரூ.91,052), மனோகரன் (ரூ.8,222), சௌடம்மன் கோவில் வீதி ரகுநாதன் (ரூ.34,368), கோட்டை மேடு, முகமது பாரூக் (ரூ.15,917), தெற்கு உக்கடம் வீரன் ஹாஜி (ரூ.1,21,437), சம்பூர்ணா ஜென்னி டிரேடர்ஸ் சரோஜா (ரூ.8,06,814), ஜி.எம்.நகர் பெரியசாமி(ரூ.33,647), பழனியப்பன் (ரூ.34,897), செட்டிபாளையம் காஜாரெஜிவுதின், ரங்கசாமி நாடார் (ரூ.20,845), ரத்தினம் வீதி தங்கராஜ் (ரூ.74,977), ராமர்கோவில் வீதி ஜெயராமன் (ரூ.3,601), சுந்தரம் (ரூ.52,663), முகம்மது ராவுத்தர் வீதி பால்சிங், ராஜா ஸ்டோர் (ரூ.13,397), கோட்டை, பழைய மார்க்கெட் ரோடு, ஆனந்தன், பழனியப்பா பால் டெய்ரி (ரூ.58,073), ரங்கே கவுடர் வீதி, அப்துல் வகாப் (ரூ.14,035) ஆகிய 16 பேர், மொத்தம் 16 லட்சத்து 35 ஆயிரத்து 928 ரூபாய் செலுத்தாமல் உள்ளனர். கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம் கூறியதாவது: கோவிலுக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு அனுபவித்தவர்கள், நீண்ட காலமாக பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு, அக்கடைகள் கோவிலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. அதுவரை நிலுவையில் இருந்த வாடகை, வசூலாகாமல் உள்ளது.அது தொடர்பாகத் தான், தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில் நிலத்தை குத்தகை எடுத்தவர்கள், அதற்கான பணத்தை செலுத்தி வருகின்றனர்.இவ்வாறு கைலாசம் கூறினார்.