புதுச்சேரி: நைனார்மண்டபம் சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அய்யப்ப சுவாமிக்கு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழா, நேற்று முன் தினம் (14ம் தேதி) மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கலச பூஜை, கண் திறப்பு, மூலமந்திர ஹோமம், இரவு 10 மணிக்கு விசேஷ மந்திர உபசாரம், மகா தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, அஸ்த்ர ஹோமம் நடந்தது. 10 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 10.15 மணிக்கு தர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு அன்ன தானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.