சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2024 10:08
கடலுார்; குறிஞ்சிப்பாடி அடுத்த சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வெள்ளி ரதம் வெள்ளோட்டம் மற்றும் வெள்ளி ரதம் கும்பாபிஷேக விழா, ஆடி கிருத்திகை சிறப்பு ேஹாமம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி காலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு ஆடி பூர கொடியேற்றம், காலை 8:30 மணிக்கு சோடச சுப்பிரமணியர் ேஹாமம், இரண்டாம் கால வேள்வி, 10:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. 11:00 மணிக்கு வெள்ளி ரதம் வெள்ளோட்டம், 11:30 மணிக்கு வெள்ளி ரதம் கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து, மாலை 4:30 மணிக்கு ஆடி பூர அம்மன் புறப்பாடும், வள்ளி தேவசேனா செல்வ சிங்காரவேலவ பெருமாள் சொர்ண கவசத்துடன் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.