பதிவு செய்த நாள்
01
ஆக
2024
11:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். இதில், நேற்று, காஞ்சி காமகோடி பீடம் வைதிக தர்ம தர்ம ஷம்ரக்சனம் சபா ட்ரஸ்ட் சார்பில் 16வது ஆண்டு பிக்ஷா வந்தனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோமாதவுடன் ஊர்வலமாக வந்து மணிமண்டபத்தில் உள்ள மஹா சுவாமிகள் சன்னிதியில் தரிசனம் செய்து, மஹா சுவாமிகள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவுருவ படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து பிக்ஷா வந்தனம் நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. இதில் தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த, 300க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் காய்கறிகள், கனி வகைகள் உள்ளிடவைகள் சமர்ப்பித்து, சிறப்பு பாத பூஜையும் செய்து வழிபாடு செய்தனர்.