அழகு நாச்சியம்மன் கோவில் 19ம் ஆண்டு திருவிளக்கு பூஜை; தீர்த்தக்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2024 07:08
அவிநாசி; அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் 19ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை ஆடி வெள்ளியை முன்னிட்டு,இன்று மாலை நடைபெறுகிறது. 19ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். அதன் பின்னர் நான்கு ரத வீதிகளிலும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றனர். இன்று (வெள்ளி),திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.