சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2024 07:08
கமுதி; கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 24ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம்,யாகசாலை பூஜை உடன் சக்தி மாரியம்மன் பால்,சந்தனம், மஞ்சள்,திரவியபொடிகள் உட்பட 21 அபிஷேகம் நடந்தது. சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடிமரத்துக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது சக்தி மாரியம்மன் சிறப்புபூஜை, தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 8ல் 1008 விளக்கு பூஜை, ஆக.9ல் பொங்கல் விழா, அக்கினிசட்டி,சேத்தாண்டி வேடம்,ஆயிரம் கண்பானை ஊர்வலம், ஆக.10ல் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.கொடியேற்றத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.