விநாயகபுரம் கருப்புசாமி கோவில் ஆடி அமாவாசை பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2024 07:08
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் கருப்புசாமி கோவில் 24ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா 5,001 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசை பெருவிழாவையொட்டி, கடந்த மாதம் 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 31ம் தேதி இரவு 7:00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் இருந்து செண்டை மேளம் முழங்க அங்காளம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு பெரியாண்டவர், பெரியநாயகி என்கிற அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆடி அமாவாசையான நேற்று காலை 7:00 மணிக்கு எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலை வளாகத்தில் இருந்து 5,001 பால்குட ஊர்வலத்தை விநாயகபுரம் கருப்புசாமி அறக்கட்டளை நிறுவனர் அருள்வாக்கு சித்தர் ஆறுமுகசாமி துவக்கி வைத்தார். பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களை கொண்டு விநாயகபுரம் கருப்புசாமிக்கு உலக நன்மை பெற வேண்டி மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பாவங்கள் தீர்க்கும் 18ம்படி பூஜை, அபிேஷக தீபாராதனை, காஞ்சிபுரம் வழிபாடு மன்றம் மற்றும் கருப்புசாமி குடும்பத்தினர் கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விநாயகபுரம் கருப்புசாமி சித்தர் பீடம், ஏவிகேஎஸ் அறக்கட்டளை, மன்றங்கள் செய்திருந்தன.