எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்கிறார் திருவள்ளுவர். எண்ணத்தில் வலிமை இருந்தால் எண்ணியதை எண்ணியபடியே பெறமுடியும் என்பது இதன் பொருள். நம் எண்ணமே சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது. அதனால், உள்ளத்தில் உறுதி இருந்தால் நிச்சயம் ஒருநாள் செயல்வடிவம் பெறும்.