கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் திரிபுராந்தக சுவாமி கோவில். இங்குள்ள திரிபுர சுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா காலங்களில் தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி , சரஸ்வதி, துர்க்கை அம்மன் பவழக்கால் சப்பரத்திலும் இரவு 7:00 மணிக்கு திரிபுரந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8:45 மணியளவில் துவங்கியது. தேரில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்பாள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து பின் 11:30 மணியளவில் கோவிலை வந்தடைந்தார். வரும் 8ம் தேதி திருக்கல்யான வைபவம் நடக்கிறது.