மேல்மலையனூர் அங்காளம்மன் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2024 08:08
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்திருந்தனர். இரவு 10.45 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 12 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.