ஆடி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 10:08
கோவை; ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.