பதிவு செய்த நாள்
06
ஆக
2024
10:08
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் கிராமத்தில், பழமையான தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம், 3வது ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ்வார்த்தல், கத்தி ஏறுதல் மற்றும் தீமிதி விழா விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா நடத்த, கிராம மக்கள் கூடி முடிவு செய்தனர்.இதையடுத்து, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு கத்தி ஏறுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு, மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இந்த திருவிழாவில், கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று,அம்மனை வழிபட்டனர்.