பதிவு செய்த நாள்
07
ஆக
2024
03:08
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், அம்மனுக்கு நுாற்றுக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரியநாயகி அம்மன் சமேத பெருவுடையார், வாராஹி, முருகன், விநாயகர் உள்ளிட்ட மூலவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது.நுாற்றுக்கணக்கான வளையல்களால், பெரியநாயகி அம்மன், வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.