1000 கண் அலங்காரத்தில் அருள்பாலித்த நித்திய சுமங்கலி மாரியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 03:08
ராசிபுரம்; ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு 1000 கண்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 1000 கண் அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.