Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதருக்கு திருக்கல்யாணம்; சீர் ... புளிய மரமாக இருக்கும் ஆதிசேஷன்; தூத்துக்குடி வந்தால் தரிசிக்கலாம்..! புளிய மரமாக இருக்கும் ஆதிசேஷன்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா இந்து கோயில் இல்லையா? அங்கு அப்படி என்ன தான் இருக்கு..!
எழுத்தின் அளவு:
ஈஷா இந்து கோயில் இல்லையா? அங்கு அப்படி என்ன தான் இருக்கு..!

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
12:08

தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையங்களின் தலைமை மையம் அமைந்துள்ளது. இந்த மையம் பிரம்மச்சாரிகள், முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் விருந்தினர்களின் உறைவிடமாகவும் இருக்கிறது. சத்குருவினால் உருவாக்கப்பட்ட இந்த இடம், ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்ததாகவும் நான்கு வித யோகப் பாதைகளான ஞான யோகம், கர்ம யோகம், க்ரியா யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகியவற்றை தனிச் சிறப்புடன் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. 


தியானலிங்கம் தான் ஈஷா யோக மையத்தின் சிறப்பாகத் திகழ்கிறது. தியானலிங்கம் என்பது ஒரு தனித்துவமிக்க சக்தி வாய்ந்த வடிவம். இதன் சக்தி எல்லைக்குள் வருபவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த உயிரை முழுமையாக உணர்வதற்கான வாய்ப்பை, தியானலிங்கம் வழங்குகிறது. ஒரு வழியில், தியானலிங்கம் என்பது முக்தியை நோக்கி அழைத்துச் செல்லும் குரு எனக் கூறலாம். தூண்களே இல்லாத, 2,50,000 செங்கற்களால் ஆன, குவிந்த கூரையுடன் கூடிய ஒரு கட்டமைப்பில் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 


ஆதியோகி ஆலயமும், ஸ்பந்தா மண்டபமும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றன. 82000 சதுர அடி கொண்ட ஆதியோகி ஆலயம், தூண்கள் இல்லாத, ஈடில்லாத, தனித்துவமான கட்டிட அமைப்பும் பொருந்திய மண்டபம். இதில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர முடியும். தனித்தன்மை வாய்ந்த, 64000 சதுர அடி கொண்ட ஸ்பந்தா மண்டபமானது, தியான மண்டபமாகவும், ஈஷா யோக மையத்தின் மேல்நிலை யோகப் பயிற்சிகள் நடக்கக் கூடிய ஒரு அரங்கமாகவும் உள்ளது. 


ஆசிரமத்தில், ஈஷா புத்துணர்ச்சி மையமும் ஈஷா ஹோம் ஸ்கூலும் இருக்கிறது. ஈஷா புத்துணர்ச்சி மையம் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் உணர உருவாக்கப்பட்ட்து. இந்த மையத்தில், சத்குருவின் வழிகாட்டலில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், உடலில் புத்துணர்ச்சியையும் உயிர் சக்தியில் சமநிலையையும் வழங்குகிறது. இதனால் நீடித்த, நாள்பட்ட வியாதிகள் நீங்கி, ஆரோக்கியமாக வாழ முடிகிறது. விஞ்ஞான முறையில் வகுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகள், அலோபதி, ஆயுர்வேதா, சித்த மருத்துவ முறைகளையும், தொன்மையான இந்திய விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளன.


ஈஷா ஹோம் ஸ்கூல் என்பது தங்கும் வசதியுடன் கூடிய ஒரு பள்ளி. வீடு போன்ற சூழ்நிலையில் நல்ல தரமான கல்வியை வழங்குவதே இப்பள்ளியின் நோக்கம். கல்வித் திட்டத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து வழங்குவதே குறிக்கோள். வழக்கமான பாடங்களைத் தவிர, பிற அம்சங்களான கலை, பாட்டு, நடனம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து வழங்குவதற்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.


தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமான கோயம்புத்தூர், விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிறுவனங்கள் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து கோவைக்கு வழக்கமான விமானங்களை இயக்குகின்றன. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில் சேவைகள் உள்ளன. கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குகிறது!


மேலும் முழு தகவலுக்கு கிளிக் செய்யவும்.. https://www.youtube.com/watch?v=sXdRT6pHwog

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு ... மேலும்
 
temple news
புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar