அம்மையார்குப்பத்தில் ஆடி வெள்ளி 1,008 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 05:08
ஆர்.கே.பேட்டை; ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டாம் வெள்ளியில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் அருள்பாலித்தார். கடந்த 2ம் தேதி மூன்றாம் வெள்ளிக்கிழமையில் குங்குமக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையான இன்று காலை 9:00 மணிக்கு, 1,008 பால்குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பகல் 12:00 மணிக்கு காமாட்சியம்மனுக்கு பாலாபிஷே கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாலை 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.