நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் மகா சண்டி ஹோம யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 04:08
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி மகா சண்டி ஹோம பூஜை ஆக., 8 ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வாஸ்து சாந்தி, சப்தச தீ பாராயணம், முதல் கால யாக வேள்வி, முதல் கால பூர்ணாகுதி நடந்தது. இன்று காலை 6:10 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, கோ பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா சண்டி ஹோம பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள கண்ணாத்தாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு பெண்கள் பச்ச மஞ்சள் அரைத்து, அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தனர். விழாவை முன்னிட்டு ஆக., 16 வெள்ளி அன்று மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். மகா சண்டி ேஹாமத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நகரத்தார் சார்பில் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா செய்திருந்தனர்.