ஆடியில் அதிசயம்.. பால் குடித்த வனவாராஹி அம்மன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2024 10:08
நத்தம்; நத்தம் அருகே மூங்கில்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இங்கு கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கொடுக்கும் பாலை வாராஹி அம்மன் குடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அம்மன் பால் குடிக்கும் அதிசய நிகழ்வை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.