ஜடாமுனிஸ்வரர் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 10:08
கோபால்பட்டி; கோபால்பட்டி கே.அய்யாபட்டியில் ஜடா முனீஸ்வரர் கோயிலில் பல வருடங்களாக மரத்தை மட்டுமே வழிபட்டு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 2 மாதங்களுக்கு முன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. ஆடி மாதத்தில் ஆடு வாங்கி கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக கொடுக்கின்றனர். அந்த வகையில் 50க்கு மேற்பட்ட ஆடுகள்,100க்கு மேற்பட்ட அரிசி சிப்பங்களைக் கொண்டு அசைவ உணவு சமைத்து பக்தர்களுக்கு வாழை இலை போட்டு பரிமாறப்பட்டது. இக்கோவிலில் வழங்கப்படும் விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வெளியே எடுத்துச் செல்லக்கூடாததால் பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே வைத்து சென்றனர்.