150 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இளமநாட்சி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 10:08
மேலுார்; தெற்குத்தெருவில் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரைக்கரை மலையான் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட இளமநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் ஆக.9 அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தம் ஆடினர். ஆக 10 தெற்குத் தெரு கோயில் வீட்டில் இருந்து கிளம்பி கடம்பவனம் பொட்டலில் உள்ள இளமநாச்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பூஜை பொருட்கள் அடங்கிய பெட்டி, சுவாமி ஆடுவது, மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களை கொண்டு சென்றனர். பிறகு பாத குரடு ஏறுதல் (அரிவாள் மீது ஏறி நின்று சாமி ஆடுவது), கரகம், தீப்பந்தம் எடுத்து சாமி ஆடினர். அதனை தொடர்ந்து கிடாய் வெட்டி, தலைக்கட்டு பொங்கல் வைத்து சுவாமிக்கு படையல் இட்டனர். நேற்று (ஆக. 11) காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வீடு முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு தேங்காய், பழம் பிரித்து கொடுக்கப்பட்டது.