பதிவு செய்த நாள்
13
ஆக
2024
04:08
ராமேஸ்வரம்; பங்களாதேஷில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து, சமூக விரோதிகள் அழிந்திட வேண்டி ராமேஸ்வரத்தில் தமிழக வி.எச்.பி., யினர் சத்ரு சம்ஹார யாக பூஜை நடத்தினர்.
பங்களாதேஷில் நடந்த வரும் கலவரத்தில் ஹிந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வெளியேறி அகதியாக வர இந்திய எல்லையில் முகாமிட்டு உள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், ஹிந்துக்கள் படுகொலை செய்யபடுவதை தடுத்து, சமூக விரோதிகள் அழிந்திட வேண்டி நேற்று ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் தமிழக வி.எச்.பி., சார்பில் ஏராளமான வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சத்ரு சம்ஹார மகா யாக வேள்வி பூஜை நடத்தினர். பூஜையில் ராமேஸ்வரம் காஞ்சி சங்கரமடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தர், பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் சுந்தரவாத்யார், ராமேஸ்வரம் பிராமணர் சங்க தலைவர் ராகவன்சர்மா , தமிழக வி.எச்.பி., தென் மண்டல தலைவர் சரவணன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்., நகர் பொருப்பாளர் தட்சிணாமூர்த்தி, காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, பலர் பங்கேற்றனர்.