சூரக்குண்டு களரி திருவிழா; மண்பானையில் பொங்கல் வைத்து படையல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 05:08
மேலுார்; சூரக்குண்டு கிராமத்தில் பெரியகாஞ்சான் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட காளி கருப்பு களரி திருவிழா இன்று நடந்தது. ஜூலை 26 முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். ஆக.,9 அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தமாடியவர்கள் சூரக்குண்டில் உள்ள கோயில் வீட்டிற்கு திரும்பினார். இன்று கோயில் வீட்டில் இருந்து பெண்கள் சுந்தரன் குளம் அருகே அமைத்துள்ள காளி கருப்பு கோயிலுக்கு பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை கொண்டு சென்றனர். பிறகு தெய்வானை ஊருணியில் இருந்து பெண்கள் மண்பானையில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். கோயில் முன்பு 30க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 74 தலைக்கட்டுகளை சேர்ந்த பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து படையிலிட்டனர். பிறகு தலைக்கட்டு பானையை அவரவர் வீட்டிற்கு கொண்டு சென்று உறவினர்களுக்கு அசைவ விருந்து வழங்கினர்.