சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்சவம்; ஆவணி மாத பிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2024 04:08
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிறப்பு, பவித்ரோத்சவ திருவிழா நடந்தது. பரமக்குடி சவாந்தரவள்ளி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு காலை, மாலை சிறப்பு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தீபாராதனைகள் நடக்கிறது. இதன்படி வருடம் முழுவதும் சுவாமிக்கு ஏதேனும் பூஜைகளில் தடைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ரோத்சவ விழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 5ம் நாளில் ஆக., 19 அன்று கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். மேலும் நேற்று ஆவணி பிறப்பையொட்டி காலை 6:00 மணிக்கு கோஷ்டியினரால் திருப்பாவை பாடப்பட்டது. மேலும் கோ பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வைஷ்ணவ சபையினர் பாராயணம் ஜெபித்தபடி கோயிலை வலம் வந்தனர்.