சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2024 05:08
சூலூர்; ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று மாலை நடந்தன. பி.என்.பி., காலனி மங்களாம்பிகை கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சோளக்காட்டு பாளையம் மாகாளியம்மன் கோவில், ராமாச்சியம் பாளையம் மாகாளியம்மன் கோவில், கருமத்தம்பட்டி புதூர் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.