அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் சூரிய பகவானுக்கு அபிஷேக அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2024 07:08
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சூரிய பகவானுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அபிஷேகம் நடந்தது.
சூரிய பகவானுக்கு உகந்த தினம் ஞாயிற்றுக்கிழமை. அதுவும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் கோயில் நடைபெறும். சூரிய பகவான் தன் ஒளி கதிர்களால் சிவனை வணங்குவார் என்பது ஐதீகம். பல கோயில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஒளி கோயில்களில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது போன்ற அமைப்பில் இருக்கும். இதேபோன்று அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலிலும் உள்ளது. நேற்று கோயிலில் சூரிய பகவான், அவருடைய மனைவிகளான உஷா, பிரக்தியுஷா ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.