ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 108 கலசாபிஷேகம்; சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 04:08
பரமக்குடி; பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 31வது ஆண்டு 108 கலசாபிஷேக விழா நடந்தது. எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில், அலர்மேலு மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் அருள்பாளிக்கிறார். இங்கு நேற்று காலை 7:00 மணிக்கு அணுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு 108 கலசங்களில் இருந்த புனித நீர் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீனிவாச பெருமாள் சேஷ வாகனத்தில் இரவு முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.