மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 04:08
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவிலில் நேற்று மாலை கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. இன்று காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜை. பிம்பசுத்தி நாடி சந்தனம். சகஸ்கர நாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மஹா பூர்மணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகளுக்கு பிறகு, கடம் புறப்பாடாகி 10:15 மணியளவில் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து 28 வது குருமஹா சன்னிதானம் சூரியனார் கோவில் ஆதினம் மகாலிங்க சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் இந்து முன்னணியினர் செய்திருந்தனர்.