புதுச்சேரி; கணபதி செட்டிக்குளம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. உழவர்கரை நகராட்சி, கணபதி செட்டிக்குளம் சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் பரிவார தேவதைகள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 7:30 மணிக்கு விசேஷசந்தி, கோ பூஜை, கெஜ பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புதிய சுவாமி சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அஷ்ட பந்தன மருந்து இடித்தல், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், மகா தீபராதனை, காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு சுந்தர விநாயகர் ராஜ கோபுரம் விமானம் கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு சுந்தரமூர்த்தி விநாயகர் மூலவர் மற்றும் பரிவார தேவதைகள் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சபாநாயகர் செல்வம், ஜெகத்ரட்சகன் எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலை சுந்தரமூர்த்தி விநாயகர் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஆலய திருப்பணி கமிட்டி, பஞ்சாயத்தாரர்கள், ஆலோசனைக்குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.