Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி ... அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நாளை துவக்கம் அனைத்து உலக முத்தமிழ் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொழையூர் வரதராஜ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கொழையூர் வரதராஜ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஆக
2024
12:08

மயிலாடுதுறை; மயிலாடுதுறையை அடுத்த கொழையூர் வரதராஜ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை இங்கு கட்டியதாகவும், அதனால் இவ்வூர் கோ அழையூர் என வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கொழையூர் என்று அழைக்கப்படுவதாகவும் கோவிலின் தல வரலாறு கூறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மூன்று கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேக தினமான இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து, விமான கலசத்தில் புனித நீர் வார்த்து, மல்லாரி இசை முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar