வடமதுரை; அய்யலுார் பொட்டிநாயக்கன்பட்டியில் வரசித்தி விநாயகர், கன்னிமூல குபேர விநாயகர், மகாகாளியம்மன், மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆக.19ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 4 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. களர்பட்டி மகாகாளியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ரெங்கராஜ், சீனிவாசன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னாள் எம்.எம்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜமோகன், கவுன்சிலர் ராகுல்பாபா, புதுவாடி ஊராட்சி தலைவர் நேரு, பா.ஜ., மாவட்ட செயலாளர் முத்துக்குமார், ஓ.பி.சி.,அணி தலைவர் குமரன் உள்பட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.