செல்வ விநாயகர் கோவிலில் அரசு –- வேம்பு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 02:08
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டான் குட்டையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தொடர்ந்து அரசு - வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை; காலை, 8:00க்கு மேல், 9:15 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், தொழில் சிறக்கவும், பொதுமக்கள் நலன் வேண்டியும் அரசு -– வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.