கல்குறிச்சியில் சக்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 03:08
காரியாபட்டி; காரியாபட்டி கல்குறிச்சியில் சக்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா, 10 நாள் நடந்தது. விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .இரவில் சுவாமி வீதி உலா வந்து பத்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடைபெற்றது. தினமும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, உற்சவமூர்த்தி வீதி உலா வந்து அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. விநாயகருக்கு 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.