சீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 09:08
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. ஆயிரத்து 8 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்தபின், சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் நடந்தது. அத்துடன் தேரில் உற்ஸவர் அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இஸ்லாமிய தம்பதியர் ஹிந்து பக்தர்களுடன் தேர் இழுத்து துவக்கி மத நல்லிணக்கத்துடன் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சாய்ராம் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் மனிதத்தேனீ சுந்தரமூர்த்தி செய்தார்.