கிருஷ்ண ஜெயந்தி விழா; சென்னை கோவில்களில் கொண்டாட்டம்
பதிவு செய்த நாள்
26
ஆக 2024 01:08
சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், உறியடி உற்சவத்துடன், விழா களைகட்டியது. ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ண ஜெயந்தியாக, இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடந்தது. சென்னை சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள, இஸ்கான் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அங்கு கிருஷ்ண யாகம், அபிஷேகம், தரிசனம் நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கவுடியா மடம் கிருஷ்ணன் கோவிலில் ராதை, ருக்மணியுடன் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோவில், கவுடியா மடம், மயிலாப்பூர் நந்தலாலா, கோட்டூர்புரம், சாஸ்திரி நகர் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.
|