Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் கிருஷ்ண ... கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த விநாயகர் சிலை மீட்பு; பக்தர்கள் வழிபாடு கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2024
11:08

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே கிருஷ்ணரை தரிசித்து வழிபட்டனர்.கிருஷ்ண பகவானை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள், மேள தாளங்கள், கோலாட்டத்திற்கு ஊர்வலம் நடைபெற்றது.


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்  கிருஷ்ணாஷ்டமியை முன்னிட்டு, தேவஸ்தான வளாகத்தில் உள்ள சப்த கோகுலத்தில் உள்ள கிருஷ்ணருக்கு, தேவஸ்தான வேத பண்டிதர்கள் சப்த பசுக்களுக்கு சாஸ்திரப் பூர்வமாக பூஜைகள் செய்யப்பட்டு தீப தூபம் நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான செயல் அலுவலர் மூர்த்தி துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணாரெட்டி, உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோசாலை பொறுப்பாளர் தனபால் கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிருஷ்ணா மந்திரில் கிருஷ்ணாஷ்டமி விழாவை கோயில் அர்ச்சகர்கள் வெகு விமர்சையாக செய்தனர்.  முன்னதாக  கிருஷ்ணருக்குத் பல்வேறு வாசனை திரவியங்களால்  அபிஷேகம் செய்து, கிருஷ்ணருக்கு தூப, தீபம், பிரசாதம் வழங்கி, சுவாமி தரிசன செய்த  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  இதில் அகில பாரத யாதவ சங்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி விழா வெகு விமரிசையாக நடத்தப் பட்டது . மாலையில் சுவாமி ஊர்வலம்  நடைபெற்றது.


இது குறித்து கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கூறுகையில்; ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள பக்தர்கள் நேற்று கிருஷ்ணாஷ்டமியை வெகு விமரிசையாக கொண்டாடி, மாலையில் சுவாமிக்கு  புஷ்ப ராகம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar