மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேங்கடேஸ்வரன் வாரி ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி பகுதியில், தென் திருமலையில் திருப்பதி வேங்கடேஸ்வர வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கோகுல் அஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. காலையில் கோவில் நடை திறந்து சுப்ரபாதம் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தன. மாலையில் ஊஞ்சல் சேவையும், நவநீத கிருஷ்ணர், ருக்மணி தாயார் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த விழாவில் மெட்ரோ பள்ளி நேஷனல் பள்ளி, சிறுமுகை அம்பாள் பள்ளி உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவர்கள் ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து, கோவிலில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். விழா முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன் பரிசும், இனிப்பும் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் கே.ஜி., தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.