திருச்செந்துார் கோயிலில் ஆவணி திருவிழா ; வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2024 12:08
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா நான்காம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாராதனை, காலை உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை சிவன் கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை சிவன் கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். 5ம் நாளான இன்று (28ம் தேதி) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோயிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் இணை ஆணையர் ஞானசேகரன் செய்து வருகின்றனர்.