கருமத்தம்பட்டி; கொள்ளுப்பாளையம் பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், செப்., 8 ம்தேதி நடக்கிறது.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி கொள்ளுப்பாளையத்தில், கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாய கூறை குலத்தாரின் குல தெய்வமான பொன் காளியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. இங்கு விமானம் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா வரும், செப்., 5 ம்தேதி இரவு கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 6 ம்தேதி காலை, 8:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி ஹோமங்கள் நடக்கின்றன. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, வரும், செப்., 8 ம்தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீ பொன் காளியம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிவகிரி ஆதீனம் குரு பீடாதிபதி தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.