திருப்பதி ஏழுமலையானுக்கு 16 எலக்ட்ரிக்கல் பைக்குகள் நன்கொடை வழங்கிய பக்தர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2024 10:08
திருப்பதி; சென்னையை சேர்ந்த TVS மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வேணு சுதர்ஷன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதியில் பைக்குகளை நன்கொடையாக வழங்கினார். இந்த 16 பைக்குகளில் 15 எலக்ட்ரிக்கல் பைக்குகள் இதன் மொத்த மதிப்பு ரூ. 22 லட்சம் ஆகும். புதிய பைக்குகளுக்கான பூஜையில் திருபதி தேவஸ்தான அதிகாரி ஜே சியாமளா ராவ் மற்றும் கூடுதல் அதிகாரி சி வெங்கையா சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நன்கொடையாளர் பைக்குகளின் சாவியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருமலை டிஐ சுப்ரமணியம் உடனிருந்தார்.