Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானுக்கு 16 ... காணப்பாடி சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் ஊர்வலம் காணப்பாடி சக்தி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
11:08

நாகப்பட்டினம்; நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா சர்ச்சில் ஆண்டுதோறும் ஆக., 29ம் தேதி துவங்கி செப்., 8 வரை ஆண்டு திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று மாலை, லட்சக்கணக்கான பக்தர்களின், ‘மரியே வாழ்க’ என்ற விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, மாலை, 5:45 மணிக்கு சர்ச் முகப்பில் இருந்து கொடி பவனி துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தஞ்சை பிஷப் சகாயராஜ் கொடியை புனிதம் செய்த பின் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. சர்ச்சில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரிய சப்பர பவனி வரும் செப்., 7ம் தேதி இரவு 8:30 மணிக்கு நடக்கிறது. மாதா பிறந்த நாளையொட்டி 8ம் தேதி காலை 6.00 மணிக்கு விண்மின் சர்ச்சில் தஞ்சை பிஷப் சகாயராஜ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் சர்ச் மேல், கீழ் கோவில்கள் மற்றும் விண்மீன் சர்ச்சில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கணி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கும். சர்ச் கலையரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், நவநாள் ஜெபம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar